::Loyola College::::


‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு’


இயேசுசபையினரால் தொடங்கப்பெற்ற இலயோலா கல்லூரியில் தமிழ்த்துறைக்கென சிறந்த வரலாறு உண்டு. 1969 ஆம் ஆண்டுக்கு முன்புவரை இளநிலை பயிலும் அனைத்து மாணவர்களுக்குமான பகுதி-1 தமிழ் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. தமிழ்த்துறையில் தமிழ்இலக்கியம் சிறப்புப்பாடமாக இருக்கவேண்டும் என அன்றையப் பேராசிரியர்கள் சிந்தித்து முடிவுசெய்து நிருவாகத்தினரின் பேராதரவுடன் 1969 ஆம் ஆண்டு சிறப்புத்தமிழ்ப் பாடத்தைத் தனிப்பாடமாகத் தொடங்கினர். 1978 ஆம் ஆண்டில் தன்னாட்சித் தகுதி பெற்றவுடன் தமிழ்த்துறைப் பாடத்திட்டங்கள் மாணவர்களின் வேலைவாய்ப்பு நோக்கில் மாற்றியமைக்கப்பட்டன.


இனிகோ தமிழ்ப்பேரவை, வீரமாமுனிவர் தமிழ்ப்பேரவை, தத்துவப்போதகர் தமிழ் இலக்கியமன்றம் என மூன்று அமைப்புகள் வழியே மாணவர்களுக்குத் தமிழ் உணர்வை அறிவித்தல், அறிவுறுத்தல், இலக்கியச்சுவையினை அளித்தல் ஆகிய முறைகளில் ஊட்டப்பெறுகிறது.


இத்துறையில் பயின்ற மாணவர்கள் ஆசிரியர்களாக, கல்லூரிப் பேராசிரியர்களாக, திரைப்படக்கல்லூரிப் பேராசிரியர்களாக, திரைப்படக் கலைஞர்களாக, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக, தனியார் வங்கி பணியாளர்களாக சிறந்த விளையாட்டு வீரர்களாக, இதழியல் கலைஞர்களாக காவல் துறைப்பணியாளர்களாக சமுதாய வளர்ச்சிக்கும் உயர்விற்கும் தங்கள் உழைப்பை நல்கி வருகின்றனர்.



இந்தத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவராகப் பேரா.வளவன் பாண்டியன், பேரா. முனைவர் அருள்சாமி, பேரா. முனைவர் க.ப. அறவாணன், பேரா. முனைவர் ச.பா. அருளானந்தம், பேரா. அடைக்கலசாமி, பேரா. முனைவர் அ. பாலறாவாயன், பேரா. த. சாமுவேல், பேரா. முனைவர் ப. ஆறுமுகம், பேரா. முனைவர் செ. தனராசு, பேரா. முனைவர் சி.அ. இராசராசன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்;. தற்போது பேரா. முனைவர் சூ. அந்தோணி செல்வநாதன் அவர்கள் 2013 கல்வியாண்டு முதல் துறைத்தலைவராக பணியாற்றிவருகிறார்.


தமிழ்த்துறையில் நிறுவப்பட்ட அறக்கட்டளைகள்

• முதுமுனைவர் அருள்தந்தை இராசமாணிக்கனார்,சே.ச., அறக்கட்டளை
• முனைவர் ந. சுப்புரெட்டியார் அறக்கட்டளை
• கி.வா. ஜகந்நாதன் அறக்கட்டளை
• தமிழ்ப்பண்பாட்டு மன்றம் அறக்கட்டளை
• எஸ்தர் ராஜம்மாள் அறக்கட்டளை

மனோன்மணீயம் பெ. சுந்தரனார் தமிழை, ‘உன் சீரிளமைத்திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துமே’ என்று பாடிய கனவைத் தமிழ்த்துறை நனவாக்கிவருகிறது.

 ::Loyola College::::
Principal & Chairman
Rev. Dr. M. Arockiasamy Xavier, S.J.

Secretary and Correspondent & Web Master
Rev. Dr. S. Lazar S.J.
CONTACT
Assistant Webmaster
Rev. Fr. A. Louie Albert S.J.
Chief Editor
Dr. K. S. Antonysamy
Phone: +91 - 44 - 28178200
Fax: +91 - 44 - 28175566
E-mail: helpdesk@loyolacollege.edu

Designed & Maintained by WEPRO

©2016 Loyola College. All rights reserved.